Thursday, September 29, 2011

நேர்மையின் மதிப்பு


நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்>>>>>>>>>போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.

இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் நேர்மையானஇந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை இலவசபொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் வெட்டுவிழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை. 

கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.

ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?

தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.

‘’
எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்...

பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர். 

ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாதுஎன்கிறார்.
ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?! என் கருத்து:- இந்திய பண்பாடு இது போன்ற ஒரு சிலரிடம் இன்னும் உள்ளது. வணங்கப்பட வேண்டிய தெய்வம் ...... இது போல மனிதர்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பொழிகிறது !!!!!!.... வாழ்க அவர் உள்ளம் .... வளர்க அவர் நெறி
 — at Bugis Junction.

Tuesday, November 30, 2010

தொலைந்த காதலுக்கு....

உதிர்ந்து கொண்டிருக்கிறது காலங்கள்
உளமாற நேசிதவளான உன்னை
உதாசின படுத்தின என்னை
எள்ளி நகையாடுகிறது என் தனிமை.....

வாழ்க்கையின் பிடிப்பை
படிப்பிதவள் நீ,
படித்தேன், பயன்படுத்துகிறேன் - ஆனால்
பக்கத்தில் நீ இல்லாமல்.....

வாழ்க்கை ஒரு நேர்கோடா? எனில்
அதன் நீளம் என்ன? - இல்லை
அது ஒரு வட்டமோ?!!!!  எனில்
அதன் சுற்றளவு என்ன?
அறிய அலைந்த, என் அருகில் அமர்ந்தாய்
அனுசரணையாய், வாழ்க்கை என்பது
நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதை
மற்ற மற்றும் உற்றவர்களோடு பகிர்ந்து
நம்மை நினைவு கூற வைக்கும்
நிலைப்புள்ளி என்றாய்.....

புரியவில்லை,.......
என சொல்ல மனமுமில்லை
ஏனென்றால்....
எனை அனுசரணையாய் பார்த்தவர்களில்
முதல் பெண் நீதான்...
எங்கே என் மந்தி தனம் - உன்னை
உக்கிரப்படுத்தி விடுமோ என்று தான்.....

வாழ்கையில் வெறுமையை மட்டும்
ஒட்டுமொத்த குத்தகைக்கு
எடுத்துக் கொண்டவனாய்
வாழ்ந்து வந்தேன்....

இருண்ட கண்டமாய்
முரட்டு பிண்டமாய்
உலவி வந்தேன்

தோண்டினாய் என்னை.........
        அன்று முதல் என் வாழ்வை வளப்படுத்தும்
தேவதையாயும் தோன்றினாய்.....
உளமாற சொல்கிறேன் - உன் பெண்மை
என்னை மென்மையுற செய்ததோடில்லாமல்
மேன்மையடையவும் செய்தது

உன்னோடிருக்கும் தருணமெல்லாம் - என்
உள்ளம் பூரணப்பட்டிருக்கும்
உன்னை நீங்கும் போது - அது வெறுமையை
வேண்டா வெறுப்போடு ஏற்று கொள்கிறது

ஏன்?!....
இது தான் அதுவா?........... என்ற கேள்வி????
எனக்குள்ளும் அதுவா?....... என்ற ஆச்சர்யம்!!!!!!
இருக்கக்  கூடாத என்றது, என் இடப்பக்கம்
அவளுக்குள்ளும் இருக்குமா? என வினவியது
என் மண்டையின் வலப்பக்கம்.......

வினவி விடையறிந்து கொள்ளலாமா? இல்லை மனதில்
விழுந்ததை விழி பார்த்து சொல்லி விடலாமா? - என்று மனம்
மௌனப்போர் புரிந்து கொண்டிருக்கையில்.......
இவையனைத்தையும் புரிந்து கொண்டது போல் - என்
இரு கரம் பற்றி ......
உன் கண்களில்
என் முக பிம்பம் - தெரியும் இடைவெளியில்

எனை
கரம்பிடிக்க கனவில் வந்த மணாளனாய் - என்
மனதில் எழுந்த கண்ணாலனாய் கண்டேன்
உனை
என்று பெண்ணுக்கே உரிய
வெட்கம் கலந்த நாணத்தோடு - ஆனால்
தைரியம் கலந்த தெளிவோடு சொன்னாய் .....

மறுக்கணம் இலக்கணமற்ற இன்பம்
என்னுள் பாய - இதயம் சிம்பொனி இசைத்தது
ரத்த நாளங்களும் நரம்பு சரங்களும்
தம் பணி மறந்து தடுமாறியது

சாதாரண மனிதனின் நிலைமறைந்து
அசாதாரணமாய் இமயம் இடித்து, கடலனைத்தையும் குடித்து
காற்றை என் கட்டை விரல் சொடுக்கைக்கு
சொக்க வைக்கும் நிலைக்கு மாறியது
என் மனநிலை.........

ஆனால்.....
உன் வயது உன் வாழ்கையை
தீர்மாணிக்க ஏற்றதல்ல - உன்
மறு பரிசீலனை செய் - என
பக்குவமாய் சொல்வதை போல - என்
பயந்தாங்கொள்ளி தனத்தை வெளிக் காட்டாமல்
வில்லினின்று விடைப்பெற்ற அம்பாய் விரைந்தேன்...

விடிய விடிய போராட்டம் - உன்னை நான்
காதலிக்க காரணம் நிறைய உண்டு - ஆனால் நான் உன்னால்
காதலிக்க பட காரணமாய் என்ன உண்டு ?...

வேலை தேடலில் ஏற்பட்ட விரக்தி - என்னுள்
சம்பாதிப்போம் எனும் நம்பிக்கையை  அடித்தது துரத்தி

இறைவன் கிறுக்கிய ஓவியம் நான் - அவன்
அலமாரியை அலங்கரிக்கும் கலையம்சம் கொண்ட சிற்பம் நீ....
நம்மை இணைத்து காதல் காவியம் சாத்தியமா?....

மரபுகளுக்கு அப்பாற்பட்டது மனம்
மரபுகளை மட்டுமே உட்படுத்தியது (திரு)மணம்
இதில் நம்மிருமனம் இணையும் திரு மணம் எவ்வாறு?.....

என்னால் நீ கருவுற முடியும் - ஆனால்
அதனால் கர்வப்பட முடியாது - ஏனென்றால் நான்
புருஷ லட்சணம் இல்லா புருஷன்....

என்றெல்லாம் என் கைலாகாத்தனத்துக்கு 
தலையங்கம் வாசித்தது - என் 
தாழ்வு மனப்பான்மை....

முடிவுரையாய்.........
உனக்கானவன் நானல்ல என்பதை,
நான் பிறந்த ஊருக்கே செல்கிறேன் எனும் 
வார்த்தையில் சொல்லி விடைபெற வந்தேன் - ஆனால் உன்
முகம் பார்த்ததும் மௌனமானேன்.....

மௌனத்தை வாசித்தாய்..........
நீ விடைபெற எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் 
என் பவித்தரமான காதல் பதில் சொல்லும் - என 
விழிநீரால் விடையொப்பம் அளித்தாய்.........

கால போக்கில்..........
உனை பிரிந்து வந்த பாதை மாறியது............
நீ என்மேல்  காட்டிய அன்பு - விதையாய் 
என் மனதில் விழ....
எனை உற்சாக படுத்திய வார்த்தைகள் - உரமாய் 
என்னை ஒப்பேற்ற........
விடை பெறுகையில் வெளிப்பட்ட விழிநீர் - வளமாக்கியது
என் வாழ்கையை.......

உன்னை கரம்பிடிக்க, நான் நினைத்த இடத்தில இருக்கிறேன்
உன்கரம் கொடுக்கும் அதே நினைவில் நீ இருக்கின்றாயா?

என் தனிமை,
உன் துணைக்காய் ஏங்கும் ஏக்கங்களை 
என் சுவாச ஓடத்தில் ஏற்றிக்கொண்டு 
பயணப்படுகிறது உன்னை நோக்கி........

காத்திருக்கிறேன்........
சுமந்து வந்த நினைவுகளோடு
பிரிந்து வந்த பாதையில்......

Sunday, November 14, 2010

பார்த்த முதல் நாளில்......


வெட்டிய மின்னல் பூட்டிய என்னுள் பாய்ந்தது 
உன் விழி பார்த்ததில்.....
இடறிய என் பார்வை சட்டென சறுக்கி சாய்ந்தது
உன் கன்னக்குழியில்....
மீட்டிய வீணையாய் உன் பூவிதழ் புன்னகை
புது  ராகமதில்....
மதி இழந்த மதியாய் 
உன்னை வட்டமிடுகிறது என் நெஞ்சம்......
இசைவை தெரிவிக்கும் - உன்
விழி அசைவை எதிர் பார்த்து.....

Friday, October 29, 2010

என் கண்ணின்று - உனை காணும் 
யோகமிழந்ததென்று - வானமாய் 
கலங்கி வடிக்கிறதன்றோ - கண்ணீரை 
மழையாய்..........


Thursday, September 30, 2010

டை ல்லை.........
புகைக்க தடையில்லை
பூலோக நீர்நிலைகளுக்கு,
ருணையுள்ள
கார்மேகத்தை தருவதால்..........