பார்த்த முதல் நாளில்......
வெட்டிய மின்னல் பூட்டிய என்னுள் பாய்ந்தது
உன் விழி பார்த்ததில்.....
இடறிய என் பார்வை சட்டென சறுக்கி சாய்ந்தது
உன் கன்னக்குழியில்....
மீட்டிய வீணையாய் உன் பூவிதழ் புன்னகை
புது ராகமதில்....
மதி இழந்த மதியாய்
உன்னை வட்டமிடுகிறது என் நெஞ்சம்......
இசைவை தெரிவிக்கும் - உன்
விழி அசைவை எதிர் பார்த்து.....

No comments:
Post a Comment