Tuesday, November 30, 2010

தொலைந்த காதலுக்கு....

உதிர்ந்து கொண்டிருக்கிறது காலங்கள்
உளமாற நேசிதவளான உன்னை
உதாசின படுத்தின என்னை
எள்ளி நகையாடுகிறது என் தனிமை.....

வாழ்க்கையின் பிடிப்பை
படிப்பிதவள் நீ,
படித்தேன், பயன்படுத்துகிறேன் - ஆனால்
பக்கத்தில் நீ இல்லாமல்.....

வாழ்க்கை ஒரு நேர்கோடா? எனில்
அதன் நீளம் என்ன? - இல்லை
அது ஒரு வட்டமோ?!!!!  எனில்
அதன் சுற்றளவு என்ன?
அறிய அலைந்த, என் அருகில் அமர்ந்தாய்
அனுசரணையாய், வாழ்க்கை என்பது
நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதை
மற்ற மற்றும் உற்றவர்களோடு பகிர்ந்து
நம்மை நினைவு கூற வைக்கும்
நிலைப்புள்ளி என்றாய்.....

புரியவில்லை,.......
என சொல்ல மனமுமில்லை
ஏனென்றால்....
எனை அனுசரணையாய் பார்த்தவர்களில்
முதல் பெண் நீதான்...
எங்கே என் மந்தி தனம் - உன்னை
உக்கிரப்படுத்தி விடுமோ என்று தான்.....

வாழ்கையில் வெறுமையை மட்டும்
ஒட்டுமொத்த குத்தகைக்கு
எடுத்துக் கொண்டவனாய்
வாழ்ந்து வந்தேன்....

இருண்ட கண்டமாய்
முரட்டு பிண்டமாய்
உலவி வந்தேன்

தோண்டினாய் என்னை.........
        அன்று முதல் என் வாழ்வை வளப்படுத்தும்
தேவதையாயும் தோன்றினாய்.....
உளமாற சொல்கிறேன் - உன் பெண்மை
என்னை மென்மையுற செய்ததோடில்லாமல்
மேன்மையடையவும் செய்தது

உன்னோடிருக்கும் தருணமெல்லாம் - என்
உள்ளம் பூரணப்பட்டிருக்கும்
உன்னை நீங்கும் போது - அது வெறுமையை
வேண்டா வெறுப்போடு ஏற்று கொள்கிறது

ஏன்?!....
இது தான் அதுவா?........... என்ற கேள்வி????
எனக்குள்ளும் அதுவா?....... என்ற ஆச்சர்யம்!!!!!!
இருக்கக்  கூடாத என்றது, என் இடப்பக்கம்
அவளுக்குள்ளும் இருக்குமா? என வினவியது
என் மண்டையின் வலப்பக்கம்.......

வினவி விடையறிந்து கொள்ளலாமா? இல்லை மனதில்
விழுந்ததை விழி பார்த்து சொல்லி விடலாமா? - என்று மனம்
மௌனப்போர் புரிந்து கொண்டிருக்கையில்.......
இவையனைத்தையும் புரிந்து கொண்டது போல் - என்
இரு கரம் பற்றி ......
உன் கண்களில்
என் முக பிம்பம் - தெரியும் இடைவெளியில்

எனை
கரம்பிடிக்க கனவில் வந்த மணாளனாய் - என்
மனதில் எழுந்த கண்ணாலனாய் கண்டேன்
உனை
என்று பெண்ணுக்கே உரிய
வெட்கம் கலந்த நாணத்தோடு - ஆனால்
தைரியம் கலந்த தெளிவோடு சொன்னாய் .....

மறுக்கணம் இலக்கணமற்ற இன்பம்
என்னுள் பாய - இதயம் சிம்பொனி இசைத்தது
ரத்த நாளங்களும் நரம்பு சரங்களும்
தம் பணி மறந்து தடுமாறியது

சாதாரண மனிதனின் நிலைமறைந்து
அசாதாரணமாய் இமயம் இடித்து, கடலனைத்தையும் குடித்து
காற்றை என் கட்டை விரல் சொடுக்கைக்கு
சொக்க வைக்கும் நிலைக்கு மாறியது
என் மனநிலை.........

ஆனால்.....
உன் வயது உன் வாழ்கையை
தீர்மாணிக்க ஏற்றதல்ல - உன்
மறு பரிசீலனை செய் - என
பக்குவமாய் சொல்வதை போல - என்
பயந்தாங்கொள்ளி தனத்தை வெளிக் காட்டாமல்
வில்லினின்று விடைப்பெற்ற அம்பாய் விரைந்தேன்...

விடிய விடிய போராட்டம் - உன்னை நான்
காதலிக்க காரணம் நிறைய உண்டு - ஆனால் நான் உன்னால்
காதலிக்க பட காரணமாய் என்ன உண்டு ?...

வேலை தேடலில் ஏற்பட்ட விரக்தி - என்னுள்
சம்பாதிப்போம் எனும் நம்பிக்கையை  அடித்தது துரத்தி

இறைவன் கிறுக்கிய ஓவியம் நான் - அவன்
அலமாரியை அலங்கரிக்கும் கலையம்சம் கொண்ட சிற்பம் நீ....
நம்மை இணைத்து காதல் காவியம் சாத்தியமா?....

மரபுகளுக்கு அப்பாற்பட்டது மனம்
மரபுகளை மட்டுமே உட்படுத்தியது (திரு)மணம்
இதில் நம்மிருமனம் இணையும் திரு மணம் எவ்வாறு?.....

என்னால் நீ கருவுற முடியும் - ஆனால்
அதனால் கர்வப்பட முடியாது - ஏனென்றால் நான்
புருஷ லட்சணம் இல்லா புருஷன்....

என்றெல்லாம் என் கைலாகாத்தனத்துக்கு 
தலையங்கம் வாசித்தது - என் 
தாழ்வு மனப்பான்மை....

முடிவுரையாய்.........
உனக்கானவன் நானல்ல என்பதை,
நான் பிறந்த ஊருக்கே செல்கிறேன் எனும் 
வார்த்தையில் சொல்லி விடைபெற வந்தேன் - ஆனால் உன்
முகம் பார்த்ததும் மௌனமானேன்.....

மௌனத்தை வாசித்தாய்..........
நீ விடைபெற எழுப்பிய எல்லா வினாக்களுக்கும் 
என் பவித்தரமான காதல் பதில் சொல்லும் - என 
விழிநீரால் விடையொப்பம் அளித்தாய்.........

கால போக்கில்..........
உனை பிரிந்து வந்த பாதை மாறியது............
நீ என்மேல்  காட்டிய அன்பு - விதையாய் 
என் மனதில் விழ....
எனை உற்சாக படுத்திய வார்த்தைகள் - உரமாய் 
என்னை ஒப்பேற்ற........
விடை பெறுகையில் வெளிப்பட்ட விழிநீர் - வளமாக்கியது
என் வாழ்கையை.......

உன்னை கரம்பிடிக்க, நான் நினைத்த இடத்தில இருக்கிறேன்
உன்கரம் கொடுக்கும் அதே நினைவில் நீ இருக்கின்றாயா?

என் தனிமை,
உன் துணைக்காய் ஏங்கும் ஏக்கங்களை 
என் சுவாச ஓடத்தில் ஏற்றிக்கொண்டு 
பயணப்படுகிறது உன்னை நோக்கி........

காத்திருக்கிறேன்........
சுமந்து வந்த நினைவுகளோடு
பிரிந்து வந்த பாதையில்......

4 comments:

  1. unkal kavi varikalai pukazha varthaikal illai ennitam.

    ReplyDelete
  2. \\ வாழ்க்கையின் பிடிப்பை
    படிப்பிதவள் நீ \\ === அருமை

    \\இருண்ட கண்டமாய்
    முரட்டு பிண்டமாய்
    உலவி வந்தேன் \\

    மறுக்கணம் இலக்கணமற்ற இன்பம்
    என்னுள் பாய .. ரத்த நாளங்களும் நரம்பு சரங்களும்
    தம் பணி மறந்து தடுமாறியது ==== வரிகள் இனிமை.

    இறைவன் கிறுக்கிய ஓவியம் நான்.

    நல்லா இருக்கு துரை .... தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. Ni konda kadhal yepothum tholaiyathu..... unnoto vaalnthu kontotha erukum.....

    un ovoru asaivilun un kadahl erukum.....

    ReplyDelete
  4. kavidhai sagadhu andral, kavi vali valum un kadhalim sagadhu valum....!

    ReplyDelete